பெயரியல்

வேற்றுமை
விளியுருபுக்கு எய்தியதன்மேல் சிறப்பு விதி

 
309ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ லீற்றயல்
அகரம் இ ஈ யாத லாண்டையா
ஈயாத லதனோ டேயுற லீற்றே
மிக்கயல் யாக்கெட் டதனய னீடல்
ஈற்றி னீருற லிவையுமீண் டுருபே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ரவ்வீற்று உயர்பெயர்க்கு = பொதுவிதி அன்றி ரகர மெய் ஈற்று உயர்திணைப் பெயர்களுள் ,( ஒருசார் ) அளபு எழல் = சில அளபெடுத்தலும் , ( ஒருசார் ) ஈற்றயல் அகரம் இ ஈ ஆதல் = சில ஈற்றயல் அகரம் இகரம் ஆதலும் ஈகாரம் ஆதலும் , ( ஒருசார் ) ஆண்டை ஆ ஈ ஆதல் = சில அவ் ஈற்றயல் ஆகாரம் ஈகாரமாதலும் , ( ஒரு சார் ) அதனோடு ஏ உறல் = சில அதனோடு ஏகாரம் ஏற்றுலும் , ( ஒருசார் ) ஈற்று ஏ மிக்கு அயல் யாக் கெட்டு அதன் அயல் நீடல் = சில ஈற்றில் ஏகாரம்மிக்கு அயலில் யாக் கெட்டு அதன் அயல் இகரம் ஈகாரமாதலும் ,( ஒருசார் ) ஈற்றின் ஈர் உறல் = சில ஈற்றில் ஈர் ஆதலும் , இவையும் ஈண்டு உருபு = ஆகிய இவையும் இவ்விடத்து விளி உருபுகளாகும் .

சிறார் - சிறாஅர் - அளபெடுத்தது .
தெவ்வர் - தெவ்விர் - ஈற்றயல் அகரம் இகரமாயிற்று .
நாய்கர் - நாய்கீர் - ஈற்றயல் அகரம் ஈகாரம் ஆயிற்று .
சான்றார் - சான்றீர் - ஈற்றயல் ஆகாரம் ஈகாரம் ஆயிற்று .
கணியார் - கணியீரே ஈற்றயல் ஆகாரம் ஈகாரமாய் ஏகாரம் மிக்கது .
நம்பியார் - நம்பீரே , ஈற்றில் ஏகாரம்மிக்கு அயல் யாக்கெட்டு அதன் அயல் இகரம் ஈகாரம் ஆயிற்று.
எமர் - எமரீர் ஈரேற்றது .
ஈண்டென்ற மிகையால் , கடலாரே - கடலீரே ; சாத்தியாரே , சாத்தியீரே எனவும் , அஃறிணைப் பெயர் பொதுப்பெயர்களைச் சிறப்பித்து , ரவ்வீற்று .
உயர்திணைப் பெயர்போலக் கூறினும் , இவ்வுருபு ஏற்றல் கொள்க.

52