எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
செய்யுளில் ஈரொற்றாய் நிற்கும் எழுத்துக்கள்

 
120லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே.*
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ல ள மெய் திரிந்த னண முன் மகாரம் - லகார ளகார ஒற்றுத் திரிந்த னகார ணகார முன்வரும் மகர ஒற்று , நைந்து ஈரொற்று ஆம் செய்யுள் உள் - முன் சொன்ன படியே குறுகி அந்த மெய்களுடனே ஈ ரொற்றுடன் நிலையாம் பாட்டினுள் .

"திசையறி மீகானும் போன்ம்" எனவும்,
"மயிலியன் மாதர் மருண்ம்" எனவும் வரும் .