லள ஈற்று அஃறிணைப்பெயர் பொதுப்பெயர்க்கண் = லகர , ளகர மெய்யீற்று அஃறிணைப் பெயர்க்கும் பொதுப்பெயர்க்கும் , ஈற்றயல் நீட்சியும் உருபு ஆகும் = பொதுவிதியன்றி ஈற்றயல் எழுத்து நீளுதலும் விளி உருபாகும். முயல் - முயால், கிளிகள் - கிளிகாள், எனவும் தூங்கல் - தூங்கால், மக்கள் - மக்காள் எனவும் வரும்.
|