ல ள ஈற்று இயைபின் ஆம் - லகர ளகார ஈற்றுப் புணர்ச்சியில் ஆகின்ற ஆய்தம். " குறில்வழி லளத்தவ் வணையி னாய்த மாகவும் பெறூஉ மல்வழி யானே " என்ற ஆய்தம், அஃகும் - தன் அரை மாத்திரையில் குறுகும். கல் + தீது - கஃறீது , முள்+தீது - முஃடீது என வரும். இது முடிவிடம் கூறல் என்னும் உத்தி . ஆய்தக் குறுக்கம் இட வகையால் இரண்டாதல் காண்க.
|