உருபு புணரியல்

உருபு புணர்ச்சிக்குச சிறப்புவிதி

 
250வவ்விறு சுட்டிற் கற்றுறதல் வழியே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வவ்விறு சுட்டிற்கு - வகர மெய் ஈற்று மூன்று சுட்டுப் பெயர்களுக்கும் , அற்று உறல் வழி = உருபுகள் புணரும் இடத்து அற்றுச்சாரியை பொருந்துதல் முறையாம் .

அவற்றை , இவற்றை , உவற்றை என அற்றுச் சாரியை வேண்டியே வருதல் காண்க .

வழியே என்ற மிகையால் அவற்றினை , இவற்றினை , உவற்றினை என இன்சாரியை வருதலும் , தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டாமையும் கொள்க . ஒழிந்த உருபுகளோடும் இப்படியே ஒட்டுக .