எழுத்தியல்

பெயர்
எழுத்தின் பெயர்

 
68வல்லினங் க ச ட த ப ற வென வாறே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
க ச ட த ப ற என ஆறு வல்லினம் - க , ச , ட , த , ப , ற , என்று ஆறும் வல்லெழுத்தாம். இவை வன்கணம் எனவும் பெயர்பெறும்.