|
| உரியியல் ஐயறிவு உயிர் | | 449 | வானவர் மக்க ணரகர் விலங்குபுள் ஆதிசெவி யறிவோ டையறி வுயிரே. | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | வானவர் மக்கள் நரகர் விலங்கு புள் ஆதி = தேவரும் மனிதரும் நரகரும் மிருகங்களும் பறவைகளும் முதலியவை , செவி அறிவோடு ஐயறிவு உயிர் = கீழ்ப்போன நாலறிவுகளே அன்றிச் செவியால் சத்தத்தை அறியும் அறிவோடு ஐயறிவு உயிர்களாம். 8
|
|