பதவியல்

பகுதி
வினைப் பகுதிக்குப் புறனடை

 
139விளம்பிய பகுதிவே றாதலும் விதியே
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
விளம்பிய பகுதி-ஏவற் பகுதி வேறாதல் போல் அதன் பின்னே சொல்லப்பட்ட மற்றை வினைப் பகுதிகள் , வேறு ஆதலும் விதியே-வேறுபடுதலும் விதியேயாகும் .

நடத்தினான் , நடப்பித்தான் , நடத்துவிப்பித்தான்

என வரும்.

இங்கே தன்வினைப் பகுதிகள் பிறவினைப் பகுதிகளானமை காண்க .