வினாச் சுட்டு உடனும் = வினாவிலும் சுட்டிலும் மறைந்து அவற்று உடனாகியும் வேறும் ஆம் வினாவவும் சுட்டவும் படாது வேறாகியும் வரும் பொருள் ஆதி உறு து = பொருளாதி ஆறனையும் பொருந்திய துவ்விகுதி ஈற்றுப் பெயரும், ஒன்றன் எண் = ஒன்று என்னும் எண் ஆகு பெயரும், இன்னன = இவை போல்வன பிறவும், ஒன்றன்பெயர் = அஃறிணைஒருமைப்பால் பெயராகும். 1.எது, ஏது, யாது எனவும், அது, இது, உது எனவும் வினாவிலும் சுட்டிலும் மறைந்து அவற்று உடனாகிப் பொருளாதி ஆறையும் பொருந்திய துவ்விகுதி ஈற்றுப் பெயர்கள் வரும். 2.குழையது, நிலத்தது, மூலத்தது, கோட்டது, குறியது, ஆடலது என வினாவவும் சுட்டவும் படாது வேறாகிப் பொருளாதி ஆறையும் பொருந்திய துவ்விகுதி ஈற்றுப் பெயர்கள் வரும். 3. அஃது, இஃது, உஃது எனச் சுட்டோடு கூடிய ஆய்தத்தைப் பொருந்திய துவ்விகுதி ஈற்றுப் பெயர்கள் வரும். 4.ஒன்று என எண் ஆகுபெயர் வரும். இன்னன என்றமையால், பிறிது, மற்றையது என அஃறிணை ஒருமைப் பொருள் குறித்து வருவன எல்லாம் கொள்க. 22
|