வினையியல்

ஒழிபு
இருவகை முற்றிற்கும் ஓர் புறனடை

 
351 வினைமுற் றேவினை யெச்ச மாகலுங்
குறிப்புமுற் றீரெச்ச மாகலு முளவே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 

வினைமுற்றே வினையெச்சம் ஆகலும் - தெரிநிலை. வினைமுற்றே வினை எச்சமாகி வருதலும் , குறிப்பு முற்(றே) ஈரெச்சம் ஆகலும் உள - வினைக்குறிப்பு முற்றே வினையெச்சமாகியும் பெயரெச்சமாகியும் வருதலும்உளவாம்.

(வ-று) 1. கண்டனன் வணங்கினான் என்பது கண்டு வணங்கினான் எனவும், முகந்தனர் கொடுத் தார் என்பது முகந்து கொடுத்தார் எனவும் பொருள்படுதலால் , வினைமுற்று வினை எச்சமாதல் காண்க,

2. அவன் வில்லினன் வந்தான் என்பது அவன் வில்லினனாகி வந்தான் எனப் பொருள்படுத லால் குறிப்பு முற்று வினையெச்சமாதல் காண்க. "வெந்திறலின் வழுதி யொடு" என்பது வெந்திறலினன் ஆகிய வழுதி எனப் பொருள் படுதலால் குறிப்புமுற்றுப் பெயரெச்சமாதல் காண்க.பிறிவும் அன்ன.

வினையியல் முற்றிற்று
32