பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
வினாவிடைகளின் முதல் சினை வழுவாமை

 
387வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல்
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வினாவினும் செப்பினும் = வினாவுதல் கண்ணும் விடை கொடுத்தல் கண்ணும் , சினை முதல் விரவா = சினையும் முதலும் ஒற்றுமை கருதி மயங்கச் சொல்லப்படாவாம்.

கண் பிறழ்ந்ததோ ,கயல் பிறழ்ந்ததோ , சாத்தன் நல்லனோ கொற்றன் நல்லனோ எனவும். இவ்வாறு வினாவினார்க்குக், கண் பிறழ்ந்தது , கயல் பிறழ்ந்தது ; சாத்தன் நல்லன் கொற்றன் நல்லன் எனவும் வரும். பிறவும் அன்ன, எனவே, கண் பிறழ்ந்ததோ எனச் சினையை வினவுவான் அதனை ஒழித்து அதனை உடையாளைக் கருதி இவள் பிறழ்ந்தாளோ கயல் பிறழ்ந்ததோ என வினவுதலும், இவள் பிறழ்ந்தாள் எனச் செப்புதலும், இவ்வாறு முதலை வினவுவானும் செப்புவானும் அதனை ஒழித்துச் சினையை வினவுதலும் செப்புதலும் வழுவாம் என்பதாயிற்று.

36