வினை = வினையும் , பெயர் = பெயரும் , குறிப்பு = குறிப்பும் , இசை = இசையும் ; எண் = எண்ணும் , பண்பு ஆறினும் = பண்பும் ஆகிய ஆறு பொருளினும் , என எனும் மொழி வரும் - என என்னும் இடைச்சொல் சேர்ந்து வரும் , என்றும் அற்று = என்று என்னும் இடைச்சொல்லும் அப்படியே ஆறு பொருளிலும் வரும். 1. " மைந்தன் பிறந்தானெனத் தந்தை உவந்தான்" - இங்கே வினையோடு இயைந்த்து . 2. " அழுக்கா றெனவொரு பாவி " - இங்கே பெயரோடு இயைந்தது . 3. "பொள்ளென வாங்கே புறம் வேரார் " இங்கே குறிப்போடு இயைந்தது . 4. " பொம்மென வண்டலம்பும் புரிகுழலை " - இங்கே இசையோடு இயைந்தது . 5. "நிலமென நீரென தீயென வளியென வானெனப் பூதங்கள் ஐந்து" - இங்கே எண்ணோடு இயைந்தது . 6. வெள்ளென விளர்த்தது - இங்கே பண்போடு இயைந்தது , என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க .
|