இடையியல்

பெயரொடு வரும் இடைச்சொற்கள் வினையொடும் வருமாறு

 
430வினையொடு வரினுமெண் ணினைய வேற்பன.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஏற்பன எண் = பொருந்துவன் அகிய எண்ணிடைச் சொற்கள் , வினையொடு வரினும் இனைய = வினையோடு வரினும் மேல்பெயரோடு வந்தால் போலும்.

மயிலாடக் குயில் வாட மாமுகில் எழுந்தது - இது செவ்வெண் - கற்றும் கேட்டும் கற்பனை கடந்தார் - இது உம்மை எண். உண்ண என்று உடுக்க என்று வந்தான் - இது என்று எண். உண்ண என உடுக்க என வந்தான் - இது என எண்.உண்ண உடுக்க என்று வந்தான். இது பிரிந்து கூடும் எண்.

11