இடையியல்

தில் இடைச்சொல்

 
431விழைவே கால மொழியிசை தில்லே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
விழைவு காலம் ஒழியிசை தில் = ஆசையுங் காலமும் ஒழிந்த சொல்லும் ஆகிய மூன்று பொருளையும் தரும் தில் என்னும் இடைச்சொல்.

1. ' வார்ந்தி லங்குவை யெயிற்றிச் சின்மொழி
யரிவையைப் பெறுகதில் லம்ம யானே " இங்கே அரிவையைப் பெறுதல் வேட்கையை உணர்த்தலால் விழைவு.

2. " பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே. " - இங்கே பெற்றகாலத்து அறிக எனக் காலத்தை உணர்த்தலால் காலம்.

3. " வருகதில் லம்மவெஞ் சேரி சேர. " - இங்கே வந்தால் ஒன்று செய்வேன் என்னும் ஒழிந்த சொற்பொருளை உணர்த்தலால் ஒழியிசை.

12