மற்று = மற்று என்னும் இடைச்சொல் , வினைமாற்று = வினைமாற்றுப் பொருளையும் , அசைநிலை = அசைத்து நிற்றல் பொருளையும் , பிறிது எனும் = பிறிது பொருளையும் தரும். 1. " மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது " இங்கே விரைந்து அறிவாம் என்னும் வினையை ஒழித்து விரையாது எறிவாம் என்னும் வினையைத் தருதலால் வினைமாற்று. 2. " மற்றென்னை யாள்க. " - இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை. 3. " ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். " - இங்கே ஊழல்லது ஒன்று என்னும் பொருளைத் தருதலால் பிறிது. 14
|