உயிரீற்றுப் புணரியல்

புணர்ச்சி

அல்வழி வேற்றுமை இவை என்பது

 
152வேற்றுமை யைம்முத லாறா மல்வழி
தொழில்பண் புவமை யும்மை யன்மொழி
எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி
தழுவு தொடரடுக் கெனவீ ரேழே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வேற்றுமை ஐம் முதல் ஆறு தழுவு தொடர் ஆம் - வேற்றுமைப் புணர்ச்சி ஐ , ஆல் , கு , இன் ,அது , கண் என்னும் ஆறுஉருபுகளும் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரப் பதங்கள் பொருந்தும் தொடர்ச்சியாம் , அல்வழி - அல்வழிப் புணர்ச்சி , தொழில் ( தழுவு தொடர் ) - வினைத்தொகையும் , பண்பு ( தழுவு தொடர் ) - பண்புத்தொகையும் , உவமை ( தழுவு தொடர்) - உவமைத்தொகையும் , உம்மை ( தழுவு தொடர் ) - உம்மைத் தொகையும் , அன்மொழி ( தழுவு தொடர் ) - அன்மொழித் தொகையும் , எழுவாய் ( தழுவு தொடர் ) - எழுவாய்த் தொடரும் , விளி ( தழுவு தொடர் ) - விளித்தொடரும் , ஈரெச்சம்(தழுவுதொடர்) - பெயரெச்சத் தொடரும் வினையெச்சத் தொடரும் , (ஈர்) முற்றுத் (தழுவு தொடர்) - தெரிநிலை வினைமுற்றுத் தொடரும் குறிப்பு வினைமுற்றுத் தொடரும் , இடை ( தழுவு தொடர்) -இடைச் சொல்தொடரும் , உரி(தழுவு தொடர்) - உரிச்சொல் தொடரும் , அடுக்கு - அடுக்குத் தொடரும் , எனஈரேழ் - எனப் பதங்கள் பொருந்தும் தொடர்ச்சி பதினான்காம் .

வேற்றுமை

வேற்றுமைத்தொகைவேற்றுமைவிரி
1.நிலங்கடந்தான்[ஐ]நிலத்தைக் கடந்தான்.
2.கல்லெறிந்தான்[ஆல்]கல்லா லெறிந்தான்
3.கொற்றன் மகன்[கு]கொற்றனுக்கு மகன்
4.மலை வீழருவி[இன்]மலையின் வீழருவி
5.சாத்தன் கை[அது]சாத்தனது கை
6.குன்றக் கூகை[கண்]குன்றத்தின்கட் கூகை

அல்வழி

ஐந்து தொகைநிலைத்தொடர்

1.கொல்யானைவினைத்தொகை
2.கருங்குதிரை

சாரைப்பாம்பு

பண்புத் தொகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.மதிமுகம்உவமைத்தொகை
4.இராப்பகல்உம்மைத் தொகை
5.பொற்றொடிஅன்மொழித்தொகை

ஒன்பது தொகா நிலைத்தொடர்

6.சாத்தன் வந்தான்எழுவாய்த் தொடர்
7.சாத்தா வாவிளித் தொடர்
8.வந்தசாத்தன்பெயரெச்சத் தொடர்
9.வந்து போனான்வினையெச்சத் தொடர்
10.வந்தான் சாத்தன்தெரிநிலை வினைமுற்றுத்தொடர்
11.பெரியன் சாத்தன்குறிப்பு வினைமுற்றுத்தொடர்
12.மற்றொன்றுஇடைச்சொற்றொடர்
13.நனிபேதைஉரிச்சொற்றொடர்
14.பாம்புபாம்புஅடுக்குத் தொடர்

தழுவு தொடர் ஆறும் பதினான்கும் எனக் கூறவே , அவ்விரு வழியிலும் தழாத்தொடரும் சில உள என்றாராயிற்று. கைக்களிறு என்பது கையை உடைய களிறு என விரிக்கப்படுதலால், கையென்பது களிறு என்பதைத் தழுவாது தொடர்ந்தது; இது தழாத்தொடராகிய வேற்றுமைப் புணர்ச்சி, சுரையாழ அம்மி மிதப்ப என்பது சுரை மிதப்ப அம்மி யாழ எனக் கூட்டப்படுதலால், சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்ப என்பதையும் தழுவாது தொடர்ந்தன ; இவை தழாத் தொடராகிய அல்வழிப் புணர்ச்சி. தழாத்தொடராவது நிலைமொழியானது வருமொழியைப்பொருள் பொருத்த முறத் தழுவாத தொடர் . பொருட் பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவுதொடர் .