பொதுவியல்

தொகைநிலைத் தொடர்மொழி
தொகைநிலைத் தொடர்ப் பாகுபாடு

 
362வேற்றுமை வினைபண் புவமை யும்மை
அன்மொழி யெனவத் தொகையா றாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 

வேற்றுமைத் ( தொகை ) = வேற்றுமைத் தொகையும்; வினைத் (தொகை) = வினைத்தொகையும், பண்புத் (தொகை) = பண்புத் தொகையும் , உவமைத் (தொகை) = உவமைத் தொகையும் , உம்மைத் (தொகை) = உம்மைத் தொகையும் , அன்மொழித் (தொகை) என = அன்மொழித் தொகைம் என , அத்தொகை ஆறு ஆகும் = முன்னே சொல்லப்பட்ட தொகைநிலைத் தொடர்மொழிகள் ஆறு வகைப்படும்.

11