ளஃகான் உயர்பெயர்க்கு = பொதுவிதியன்றி ளகரமெய் ஈற்றுயர்திணைப் பெயர்களுள் , ( ஒருசார்) அளபு = சில அளபெடுத்தலும் , (ஒருசார் ) ஈறு அழிவு = சில ஈறு கெடுதலும் , ( ஒருசார் ) அயல் நீட்சி = சில ஈற்றயல் நீளுதலும் , ( ஒருசார் ) இறுதி யவ் வொற்று ஆதல் = சில இறுதி ளவ் ஒற்று யவ் ஒற்றாதலும் , (ஒருசார் ) அயலில் அகரம் ஏ ஆதலும் = சில ஈற்றயல் அகரம் ஏகாரம் ஆதலும் , விளித்தனு = விளி உருபுகளாகும் . (உ-ம்) வேள் - வேஎள் - அளபெடுத்தது . எல்லாள் - எல்லா - ஈறு கெட்டது மக்கள் - மக்காள் - ஈற்றயல் நீண்டது . குழையாள் - குழையாய் - ளவ்வொற்று யவ் ஒற்றாயிற்று . அடிகள் - அடிகேள் ஈற்றயல் அகரம் ஏகாரம் ஆயிற்று . 51
|