சில் வழி-சொல்லுக்கு நடுவே சிலவிடத்து , ஐகான் (வழி) யவ் வழி-ஐகாரத்தின் பின்னும் யகர மெய்யின் பின்னும் , நவ்வொடு ஞஃகான் உறழும் - இயல்பாய் வரும் நகர மெய்யினோடு ஞகரமெய் ஒத்து நடக்கும் , என்மரும் உளர் - என்று சொல்வாரும் சிலர் உன்டு . "செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டுமகிழ்ந்து நிற்க நெஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீலமணிமிடற்றான் கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே." எனவும், சேய்நலூர் - சேய்ஞலூர் , ஐந்நூறு - ஐஞ்ஞூறு எனவும் வரும். மண்யாத்த கோட்ட மழகளிறு - "மண்ஞாத்த கோட்ட மழகளிறு ." எனவும் , பொன்யாத்த தார் - "பொன்ஞாத்த தார் ." எனவும், ணகர னகர மெய்களின்முன் வருமொழி வினைச் சொல்லின் முதலிலேயா , நின்றவிடத்து ஞா நிற்பினும் ஒக்கும் போலிக்கு ஆசிரியர் தொல்காப்பியர் சூத்திரம் செய்தபடி இவ்வாசிரியர் கூறாதொழிந்தது இறந்தது விலக்கல் என்னும் உத்தி.
|