பொதுப்பாயிரம்

ஆசிரியனது வரலாறு
நல்லாசிரியன் இலக்கணம்

 
29ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும் - சந்தேகம் தீர நிறுக்கப்பட்ட பண்டத்தின் அளவைக் காட்டலும் , மெய்ந் நடுநிலையும் - உண்மைபெறத் தான் இரண்டு தட்டுக்களுக்கும் நடுவே நிற்றலும் , நிறைகோற்கு மிகும் - தராசு கோலின் இடத்துக் குணங்களாக மிகும் .

சந்தேகம் தீர வினாவப்பட்ட சொல்பொருளின் இயல்பைக் காட்டலும் , புலவர் இருவர் மாறுபட்டார் ஆயின் உண்மை பெறத் தான் அவ் இருவருக்கும் நடுவாக நிற்றலும் ஆசிரியன் இடத்துக் குணங்களாக மிகும் ஆதலால் , நிறைகோல் அவனுக்கு உவமானம் ஆயிற்று .