பெயரியல்

வேற்றுமை
விளிஉருபுக்கு எய்தியதன்மேல் சிறப்பு விதி

 
306ஐயிறு பொதுப்பெயர்க் காயு மாவும்
உருபா மல்லவற் றாயுமாகும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஐ இறு பொதுப் பெயர்க்கு ஆயும் ஆவும் = ஐகார ஈற்றுப் பொதுப்பெயர்க்குப் பொது விதியால் இயல்பும் ஏகாரம்மிகுதலும் அன்றி ஐகாரம் ஆயும் ஆவும் ஆகத் திரிதலும் , அல்லவற்று ஆயும் = உயர்திணை அஃறிணைப் பெயர்களுக்கு அவ் இரண்டு உருபுகளன்றி ஐகாரம் ஆ எனத் திரிதலும் ; உருபு ஆகும் = விளி உருபுகள் ஆகும் .

1 . அன்னை = அன்னாய் , அன்னா பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும் வந்தன .

2 . விடலை - விடலாய் எனவும் , நாரை - நாராய் எனவும் உயர்திணைப் பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்கும் ஆய் வந்தது .

உரையிற்கோடல் என்னும் உத்தியால் , "அன்னே யுன்னையல்லால் இனியாரை நினைக்கேனே" எனப் பொதுப்பெயர்க்கு ஐகாரம் ஏகாரமாகத் திரிதலும் கொள்க .

49