பெயரியல்

வேற்றுமை
சில வேற்றுமையுருபு செய்யுளிடத்துத் திரிந்து வருதல்

 
318ஐயான்குச் செய்யுட் கவ்வு மாகும்
ஆகா வஃறிணைக் கானல் லாதன .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஐ ஆன் குச் செய்யுட்கு அவ்வும் ஆகும் = ஐயும் ஆனும் குவ்வுமாகிய மூன்று உருபுகளும் செய்யுளிடத்து ஒரோவழி அகரமாகத் திரிந்து வரவும் பெறும் , அஃறிணைக்கு ஆன் அல்லாதன ஆகா = அஃறிணை இடத்து ஆன் அல்லாத ஐயும் குவ்வும் அகரமாகத் திரியாவாம் .

ஆகா வஃறிணைக் கானல்லாதன எனவே , உயர் திணையிலே மூன்று உருபும் திரயும் என்பது பெற்றாம் .

1 . காவலோனைக் களிறஞ்சும்மே என்பது "காவலோனக் களிறஞ்சும்மே" என்றும் , புலவரான் என்பது "புலவரான" என்றும் , கடி நிலையின்றே யாசிரியற்கு என்பது "கடிநிலையின்றே யாசிரியற்க " என்றும் , உயர்திணையிலே மூன்று உருபும் திரிந்தன .

2 . புள்ளினான் என்பது "புள்ளினான " என ஆன் உருபு ஒன்றும் அஃறிணையிலே திரிந்தது . அகரமாகத் திரியும் என்றதனால் , ஆனுங்குவ்வுந் திரிந்த போது , சாரியை என்பது பெற்றாம் .

61