வினையியல்

முற்றுவினை
முன்னிலை ஒருமை வினைமுற்று

 
335ஐயா யிகர வீற்ற மூன்றும்
ஏவலின் வரூஉ மெல்லா வீற்றவும்
முப்பா லொருமை முன்னிலை மொழியே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஐ ஆய் இகர ஈற்ற மூன்றும் = ஐ , ஆய் , இ என்னும் மூன்று விகுதிகளை இறுதியில் உடைய மொழிகளும், ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும் = விகுதி குன்றாதும் குன்றியும் நிற்பனவாகிய ஏவலிலே வரும் இருபத்துமூன்று ஈற்று மொழிகளும், முப்பால் ஒருமை முன்னிலை மொழி = ஒருவன் , ஒருத்தி , ஒன்று என்னும் மூன்று பால்களுக்கும் பொதுவாகிய முன்னிலை ஒருமை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாம்.

இகர விகுதி எதிர்காலத்தை இடைநிலை இன்றித் தானே காட்டுதல் பதவியலில் பெறப்பட்டது.

ஏவல் வினைமுற்றுத் தெரிநிலைவினை ஒன்றற்கே உரிமையின், உம்மை கொடுத்துப் பிரித்தார்.
இ.தெரி.நி.தெரி.எ.தெரி.குறி.
உண்டனைஉண்கின்றனைஉண்பைகுழையினை} நீ
உண்டாய்உண்கின்றாய்உண்பாய்குழையாய்
உண்டிஉண்ணாநின்றிசேறிவில்லி

ஆய், இ, அல், ஏல், ஆல் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்களும், ஆய் விகுதி புணர்ந்து குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் வினைச்சொற்களும், முன்னிலை ஏவல் ஒருமைத் தெரிநிலை வினை முற்றுக்களாம்.

இவற்றுள் , அல், ஏல், ஆல் என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறை இடத்து வரும்.
உண்ணாய்உண்ணுதிஉண்} நீ
உண்ணல்உண்ணேல்மறால்

எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்றுக்கள் உண்ணாதே, உண்ணாதி என , எதிர்மறை ஆகார இடைநிலையின் முன் தகர எழுத்துப்பேற்றோடு, ஏகார விகுதி இகர விகுதிகளுள் ஒன்று பெற்றும் , வரும்.

16