ன ல முன் ( த நக்கள்) ற ன வும் = னகர, லகரங்களின் முன் வருந் தகரம் றகரமாம் அவற்றின்முன் வரும் நகரம் னகரமாம் , ண ள முன் த நக்கள் ட ணவும் ஆகும் = ணகர, ளகரங்களின் முன் வரும் தகரம் டகரமாம் அவற்றின் முன் நகரம் ணகரமாம் , ஆயுங்கால் = ஆராயுமிடத்து. பொன்+தீது = பொன்றீது, கல்+தீது = கற்றீது பொன் + நன்று = பொன்னன்று, கல்+நன்று = கன்னன்று எனவும் . மண்+தீது = மண்டீது, முள்+தீது = முட்டீது, மண்+நன்று = மண்ணன்று, முள்+ நன்று = முண் ணன்று எனவும் அல்வழியிலே திரிந்தன. பொற்றீமை, கற்றீமை, பொன்னன்மை, கன் னன்மை எனவும், மட்டீமை, முட்டீன்மை, மண்ணன்மை, முண் ணன்மை, எனவும் வேற்றுமையிலே திரிந்தன, ' ஆயுங் காலே ' என்றதனால், அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தாலன்றி மயக்கவிதி இன்மையால் இப்படிப் புணரும் முதல் ஈறு இரண்டனுள் ஒன்றேனும் இரண்டுமேனும் விகாரப்பட்டு மயங்குதற்கு உரியனவாகிப் புணருமென்பதும், மயக்க விதியுள்ளனவற்றிற்கு வரும் விகாரம் அல்வழி வேற்றுமைப்பொருள் நோக்கத்தால் வருமென்பது பெற்றாம்.
|