னவ்வீற்று உயர்திணை அல் இருபெயர்க்கண் = பொது விதி அன்றி னகரமெய்யீற்று அஃறிணைப்பெயர் பொதுப்பெயர்களிடத்து , (ஒருசார் ) இறுதி அழிவு = சில ஈறு கெடுதலும் , (ஒருசார் ) அதனோடு அயல் நீட்சி = சில ஈறுகெடுதலுடனே ஈற்றயல் நீளுதலும் விளி உருபுகளாம் . அலவன் - அலவ எனவும் , கலுழன் - கலுழா எனவும் , சாத்தன் - சாத்த எனவும் , கொற்றன் - கொற்றா எனவும் முறையே அஃறிணைப் பெயரிலும் பொதுப்பெயரிலும் அவ் இரண்டும் வந்தன .
|