உயிரீற்றுப் புணரியல்

புணர்ச்சி

புணர்ச்சி விகாரத்தில் வருவதோர் ஐயம் ஒழித்தல்

 
157ஒருபுணர்க் கிரண்டு மூன்று முறப்பெறும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒரு புணர்க்கு - ஒரு புணர்ச்சிக்கு , இரண்டு மூன்றும் உறப் பெறும் - ஒன்றே அன்றி இரண்டு மூன்றும் வரப் பெறும் .

யானை+கோடு = யானைக்கோடு - ஒரு விகாரம் .
நிலம் + பனை = நிலப்பனை - இரண்டு விகாரம் .
பனை + காய் = பனங்காய்-மூன்று விகாரம் . 7
அ.கு . வினாக்கள் (நூல் பக்கம் 136)