ஒரு நெறி இன்றி விரவிய பொருளால் - ஒரு வழிப்படாது கலந்த பல பொருள்களினாலே , பொது மொழி தொடரின் - பொது மொழியாகத் தொடரப் பெறின் , அது படலம் ஆகும் - அது படல உறுப்பாம் . பொது மொழி பொதுவாகச் சொல்லப்படுவது . ஒரு பொருளையே நுதலி வருவது சூத்திரம் , ஓரினப் பொருள்களையே தொகுப்பது ஓத்து ; பலவினப் பொருள்களுக்கும் பொதுவாகிய இலக்கணங் கூறுவது படலம் . பல சூத்திரங்களினது தொகுதி ஓத்து ; பல ஓத்துக்களினது தொகுதி படலம் . ஓத்து என்றது இயலை ; படலம் என்றது அதிகாரத்தை .
|