உருபு புணரியல்

உருபு புணர்ச்சிக்குச சிறப்புவிதி

 
249ஒன்று முதலெட் டீறா மெண்ணூர்
பத்தின்முன் னான்வரிற் பவ்வொற் றொழியமேல்
எல்லா மோடு மொன்பது மிற்றே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர் பத்தின் முன் = ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்களோடு புணர்ந்த பத்து என்னும் எண்முன் உருபுகள் புணரும் இடத்து , ஆன்வரின் = ஆன் சாரியை வருமாயின் , பவ் வொற்று ஒழிய மேல் எல்லாம் ஓடும் - அப்பத்து என்னும் எண்ணினது பகரமெய் ஒன்றுமே நிற்க அதன் மேலே நின்ற எல்லா எழுத்தும் கெடும் , ஒன்பதும் இற்று = ஒன்பது என்னும் எண் முன்னும் உருபுகள் புணரும் இடத்து ஆன் சாரியை வரின் அதன் பகரமெய் நிற்க மேலே நின்ற எல்லா எழுத்தும் கெடும் .

ஒரு பானை , ஒரு பதை , ஒரு பஃதை எனவும் .
ஒன்பானை , ஒன்பதை , ஒன்பஃதை எனவும் .
விகற்பித்து வரும் , மற்றவைகளோடும் இப்படியே ஒட்டுக ,

ஒருபது , ஒருபஃது என விகாரப்பட்டு வரும் பத்து என்பார் , எண்ணூர் பத்து என்றார் .

ஆன் வருதலைப் பராமுகமாகச் சொன்னமையால் , உகரச் சாரியை இன் சாரியைகளும் வேண்டிய இடத்து வரும் எனக் கொள்க .