ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா = ஒருமொழியும் தொடர்மொழியும் பொது மொழியும் என மூன்று பிரிவினதாகி , இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும் = இருதிணையாகிய ஐம்பால் பொருளையும் அப்பொருளையன்றித் தன்னையும் , மூவகையிடத்தும் = மூன்றிடத்திலும் , வழக்கொடு செய்யுளின் - வழக்கினிடத்தும் செய்யுளிடத்தும் , வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல் - வெளிப்படையாலும் குறிப்பினாலும் விளக்குவது சொல்லாகும் . பொருளையும் தன்னையும் என்றதனால் , உயிர்க்கு அறிவானது கருவியாய் நின்று தன்னையும் பொருளையும் உணர்த்துமாறுபோல , ஒருவருக்குச் சொல்லானது கருவியாய் நின்று தன்னையும் இருதிணை ஐம்பால் பொருளையும் உணர்த்தும் என்பது பெற்றாம்
|