பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு வழாநிலை

 
397ஒரு பொருட் பல்பெயர் பிரிவில வரையார்
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருபொருட் பல்பெயர் = ஒருபொருளின்மேல் பல பெயர் சொல்லும்போது , பிரிவு இல வரையார் = அப் பொருளினின்றும் பிரிதல் இல்லாதனவற்றை நீக்காது கொள்வர் புலவர் .

எனவே , பிரிவுள்ளனவற்றை நீக்குவர் என்பதாயிற்று

ஆசிரியன் பேரூர்கிழான் சாத்தன் வந்தான் , பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வந்தான் என்பன , பிரிவிலவாய்ப் பல பெயரும் ஒரு பொருளின்மேற் சென்று , கேட்போர்க்குச் சொல்லுவோன் குறித்தபொருளை விளக்கி நின்றன .

பகை இயல்பாயிலி படைக்கை மறவன் , எழுத்துணர்வில்லோன் இலக்கண நிறைகடல் எனவரிற், பகை இயல்பாகவே இல்லாதவனைப் படைக்கை மறவன் என்றலும் , எழுத்துணர்வு இல்லாதவனை இலக்கண நிறைகடல் என்றலும் கூடாமையால் பிரிந்து வாழுவாம் என்க .

46