பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு வழுவமைதி

 
398ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருபொருட் பன்மொழி = ஒருபொருளைக் குறித்து வரும் பலசொற்கள் , சிறப்பினின் = அவ்வாறு வருதற்கு ஓர் காரணம் இன்றாயினும் சிறந்து நிற்கையால் , வழா = அவை வழு என்று நீக்கப்படாவாம் .

சிறுந்துநிற்றல் - செவிக்குச் சொல்லின்பம் தோன்ற நிற்றல் .

(வ-று) மீமிசை ஞாயிறு , புனிற்றிளங் கன்று , நாகிளங் கமுகு , உயர்ந்தோங்கு பெருவரை , குழிந்தாழ்ந்த கண் எனவரும் .

47