இடையியல்

ஒடு , தெய்ய

 
436ஒடுயுந் தெய்யவு மிசைநிறை மொழியே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒடுவும் தெய்யவும் = ஒடு , தெய்ய என்னும் இரண்டும் , இசைநிறை மொழி = இனசநிறைத்தல் பொருளைத் தரும் சொற்களாம்.

" விதைக்குறு வட்டிற் போதொடு பொதுள " - எனவும்,
" சொல்லேன் தெய்ய நின்னொடு பெயர்த்தே " எனவும் வரும்.

17