உரியியல்

முன்னதற்கு ஓர் புறனடை

 
451ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒற்றுமை நயத்தின் = எவ் உயிர் எவ் உடம்பை எடுத்ததோ அவ் உடம்பின் நிற்கும் ஒற்றுமை நயம் கருதியவழி , ஒன்று எனத் தோன்றினும் = ஒன்றுபோல் தோன்றுமாயினும் , வேற்றுமை நயத்தின் = உயிர் சித்தாயும் உடம்பு சடமாயும் நிற்கும் வேற்றுமை நயமாகிய உண்மை கருதியவழி , உடல் உயிர் வேறு = அவ் உடலும் உயிரும் வேறு ஆம் .
10