உரியியல்

பல குணம் தழுவிய உரிச்சொல்.

 
457கடியென் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்க மச்சஞ் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை யார்த்தல்
வரைவே மன்றல் கரிப்பி னாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
கடி என் கிளவி= கடி என்னும் உரிச்சொல் , காப்பு= காவலும் , கூர்மை = கூர்மையும் , விரை= வாசனையும் , விளக்கம் = விளக்கமும் , அச்சம் அச்சமும் , சிறப்பு = சிறப்பும் , விரைவு = விரைவும் , மிகுதி = மிகுதியும் , புதுமை = புதுமையும் , ஆர்த்தல் = ஒலித்தலும் , வரைவு = நீக்கலும் , மன்றல் = மணமும் , கரிப்பின் ஆகும் = கரிப்பும் ஆகிய பதின்மூன்று குணங்களிலும் வரும் .

" கடி நகரடைந்து " .................................... காப்பு .
"கடி நுனைப் பகழி " ............................. கூர்மை .
"கடிமாலை சூடி " ................................. நாற்றம் .
"கண்ணாடி அன்ன கடுமார்பன் " .......... விளக்கம் .
"கடி யரமளிர்க்கே கைவிளக்காகி " ......அச்சம் .
"அம்பு துஞ்சுங்கடியரண் " .....................சிறப்பு .
"எம்மம்பு கடி விடுதும் " ...................... விரைவு .
"கடியுண் கடவுட்டகிட் செழுங்குரல் "...................................மிகுதி .
"கடிமணச்சாலை " ............................... புதுமை .
"கடிமுரசு " ........................................... ஆர்த்தல் .
"கடிமது நுகர்வ " ................................ வரைவு .
"கடிவினை முடுகினி ".......................... மன்றல் .
"கடி மிளகுதின்ற கல்லாமந்தி " ..................கரிப்பு .

16