எழுத்தியல்

பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு

 
79கஙவுஞ் சஞவும் டணவு முதலிடை
நுனிநா வண்ண முறமுறை வருமே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
க ங (நா) முதல் (அண்ண முதல்) - கவ்வும் ஙவ்வும் நாக்கின் அடி மேல்வாய் அடியையும் , சஞ (நா) இடை (அண்ண இடை) - சவ்வும் ஞவ்வும் நாக்கின் நடு மேல்வாய் நடுவையும் , டண (நா) நுனி (அண்ண நுனி) உற - டவ்வும் ணவ்வும் நாக்கின் கடை மேல்வாய்க் கடையையும் பொருந்த , முறைவரும் - இம்முறையே பிறக்கும் .