331 | கு டு து று என்னும் குன்றிய லுகரமோடு அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை |
|
உரை |
216 | குயின் ஊன் வேற்றுமைக் கண்ணும் இயல்பே |
|
உரை |
26 | குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும் அமைபவன் நூல் உரை ஆசிரி யன்னே |
|
உரை |
108 | குற்று உயிர் அளபின் ஈறாம் எகரம் மெய்யொடு ஏலாது ஒ நவ்வொடு ஆம் ஒள ககர வகரமோடு ஆகும் என்ப |
|
உரை |
172 | குறியதன் கீழ் ஆக் குறுகலும் அதனோடு உகரம் ஏற்றலும் இயல்புமாம் தூக்கின் |
|
உரை |
90 | குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே |
|
உரை |
229 | குறில் செறியா ல ள அல்வழி வந்த தகரம் திரிந்தபின் கேடும் ஈர் இடத்தும் வரு ந திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்பும் திரிபும் ஆவன உள பிற |
|
உரை |
228 | குறில் வழி ல ள தவ்வணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழி யானே |
|
உரை |
210 | குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த நகரம் திரிந்துழி நண்ணும் கேடே |
|
உரை |
12 | குன்றக் கூறல் மிகைபடக் கூறல் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை என்றிவை ஈர் ஐங் குற்றம் நூற்கே |
|
உரை |