40 | கோடல் மரபே கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவன்குறிப்பின் சார்ந்து இரு என இருந்து சொல் எனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச் செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆகக் கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்துப் போ எனப் போதல் என்மனார் புலவர் |