77இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு
அண் பல் முதல் நா விளிம்பு உற வருமே
உரை
162இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ் இருமையும்
உயிர்வரின் உடம்படு மெய் என்று ஆகும்
உரை
304இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல
யவ்வீற்று உயர்திணை ஓ ர அல் இவற்றொடு
ணஃகான் ஆ ஈறு ஆகும் பொதுப்பெயர்
ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன
உரை
91இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில்
அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே
உரை
62இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின
உரை
275இடுகுறி காரணம் மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே
உரை
239இடை உரி வடசொலின் இயம்பிய கொளாதவும்
போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே
உரை
201இடைச்சொல் ஏ ஓ முன்வரின் இயல்பே
உரை
182இடைத்தொடர் ஆய்தத்தொடர் ஒற்று இடையின்
மிகாநெடில் உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை
உரை
416இடைநிலை மொழியே ஏனை ஈர் இடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை
உரை
146இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்
அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐ ஐம்
பொது எழுத்து ஒழிந்த நால் ஏழும் திரியும்
உரை
70இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே
உரை
149இணைந்தியல் காலை ய ர லக்கு இகரமும்
மவ்வக்கு உகரமும் நகரக்கு அகரமும்
மிசைவரும் ரவ்வழி உவ்வுமாம் பிற
உரை
253இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதியும் பதமும் உருபும் பகுத்து இடை
நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறியே
உரை
257இதற்கு இது முடிபு என்று எஞ்சாது யாவும்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயலான்
வகுத்து உரையாதவும் வகுத்தனர் கொளலே
உரை
305இம்முப் பெயர்க்கண் இயல்பும் ஏயும்
இகர நீட்சியும் உருபாம் மன்னே
உரை
255இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும்
உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்தும் நின்றும்
அன்ன பிறவும் ஆகும் ஐ உருபே
உரை
165இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும் விதவாதன மன்னே
உரை
100இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை
உரை
404இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல்
உரை
337இர் ஈர் ஈற்ற இரண்டும் இருதிணைப்
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல்
உரை
396இரட்டைக் கிளவி இரட்டின் பிரிந்து இசையா
உரை
296இரண்டாவதன் உருபு ஐயே அதன்பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும்
உரை
363இரண்டு முதலாம் இடை ஆறு உருபும்
வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே
உரை
198இரண்டு முன்வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒற்று ன ஆகும் என்ப
உரை
352இருதிணை ஆண்பெண்ணுள் ஒன்றனை ஒழிக்கும்
பெயரும் வினையும் குறிப்பி னானே
உரை
8இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும்
உரை
233இல் என் இன்மைச் சொற்கு ஐ அடைய
வன்மை விகற்பமும் ஆகா ரத்தொடு
வன்மை ஆகலும் இயல்பும் ஆகும்
உரை
267இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉ என்று ஆகும் மூவகை இயல்பும்
இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும் முத் தகுதியோடு ஆறாம் வழக்கு இயல்
உரை
141இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடை நின்றதை
வினைப்பெயர் அல் பெயர்க்கு இடைநிலை எனலே
உரை
382இறப்பு எதிர்வு நிகழ்வு எனக் காலம் மூன்றே
உரை
460இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்று இசை நூலுள் குண குணிப்பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதலா
நல்லோர் உரிச்சொலில் நயந்தனர் கொளலே
உரை
399இனைத்து என்று அறிபொருள் உலகின் இலாப்பொருள்
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும்
உரை