407ஈ தா கொடு எனும் மூன்றும் முறையே
இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை
உரை
36ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளம்கொளக்
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப
உரை
223ஈமும்,
கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே
உரை
160ஈற்றுயா வினாவிளிப் பெயர்முன் வலி இயல்பே
உரை
136ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே
உரை