41 | நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை கடனாக் கொளினே மடம் நனி இகக்கும் |
|
உரை |
15 | நூல்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி ஏற்புழி அறிந்து இதற்கு இவ்வகை யாமெனத் தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி |
|
உரை |
4 | நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய் நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம் என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே |
|
உரை |
3 | நூலே நுவல்வோன் நுவலும் திறனே கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும் எல்லாநூற்கும் இவை பொதுப் பாயிரம் |
|
உரை |