130பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்
எழுத்து ஈறு ஆகத் தொடரும் என்ப
உரை
133பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னி புணர்ப்ப முடியும் எப்பதங்களும்
உரை
131பகுப்பால் பயன் அற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்றாய் முடிந்து இயல்கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்
உரை
24பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொல் புலவனே சேயிழையா-எஞ்சாத
கையே வாயாகக் கதிரே மதியாக
மையிலா நூல் முடியும் ஆறு
உரை
384விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும்
பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி
உரை
265படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின்
பெறப்படும் திணைபால் அனைத்தும் ஏனை
இடத்து அவற்று ஒருமைப் பன்மைப் பாலே
உரை
365பண்பை விளக்கும் மொழிதொக் கனவும்
ஒரு பொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை
உரை
243பதம்முன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்
உரை
348பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில்
செல்லாது ஆகும் செய்யும் என் முற்றே
உரை
35பல்வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் மது முடத்தெங்கே
உரை
268பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல் பல
சொல்லால் பொருட்கு இடன் ஆக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்
உரை
442பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்
உரை
454பல்வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம்
அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள்குணம்
உரை
170பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற
உரை
178பவ்வீ நீ மீ முன்னர் அல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமாம் மீக்கே
உரை
144ப வ மூ இடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசை வினை இடைநிலையாம் இவை சில இல
உரை
462பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழு அல கால வகையின் ஆனே
உரை
102பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய்யும் மொழி முதல்
உரை
203பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐ போய் அம்மும் திரள்வரின் உறழ்வும்
அட்டு உறின் ஐ கெட்டு அந்நீள்வுமாம் வேற்றுமை
உரை