67எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏ இரு வழியும் வினா ஆகும்மே
உரை
163எகர வினா முச்சுட்டின் முன்னர்
உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்
பிறவரின் அவையும் தூக்கில் சுட்டு
நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே
உரை
357எச்சப் பெயர்வினை எய்தும் ஈற்றினும்
உரை
193எட்டன் உடம்பு ண ஆகும் என்ப
உரை
303எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபுமாம் பொருள் படர்க்கை யோரைத்
தன்முகம் ஆகத் தான் அழைப்பதுவே
உரை
88எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பின்
திரிபும் தத்தமின் சிறிதுள ஆகும்
உரை
188எண் நிறை அளவும் பிறவும் எய்தின்
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண்ணுள்
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்றுயிர் மெய்யும் ஏழன் உயிரும்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்
உரை
57எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதல் ஈறு இடைநிலை போலி என்றா
பதம் புணர்பு எனப் பன்னிரு பாற்று அதுவே
உரை
368எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும் நான்கு அளவையுள் உம் இலது அத்தொகை
உரை
158எண்மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும்
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும்
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி
மிகலுமாம் ண ள ன ல வழி ந திரியும்
உரை
425எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே
உரை
388எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே
உரை
245எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறுமே
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும்
உரை
246எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை
தள்ளி நிரலே தம் நும் சாரப்
புல்லும் உருபின் பின்னர் உம்மே
உரை
319எல்லை இன்னும் அதுவும் பெயர்கொளும்
அல்ல வினைகொளும் நான்கு ஏழ் இருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்
உரை
350எவன் என் வினா வினைக்குறிப்பு இழி இருபால்
உரை
391எழுத்து இயல் திரியாப் பொருள்திரி புணர்மொழி
இசைத் திரிபால் தெளிவு எய்தும் என்ப
உரை
128எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
பதமாம் அது பகாப்பதம் பகுபதம் என
இரு பால் ஆகி இயலும் என்ப
உரை
11எழு வகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூல் குற்றம் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே
உரை
415எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள்
பொருள் நோக்கு உடையது பூட்டுவில் ஆகும்
உரை
429என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி
நின்றும் பிரிந்து எண்பொருள் தொறும் நேரும்
உரை