261மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
உரை
122மகர இறுதி அஃறிணைப் பெயரின்
னகரமோடு உறழா நடப்பன உளவே
உரை
30மங்கலம் ஆகி இன்றி அமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகம் மலர்வு உடையது பூவே
உரை
115மம்முன் ப ய வ மயங்கும் என்ப
உரை
166மரப்பெயர் முன்னர் இன மெல்லெழுத்து
வரப் பெறுனவும் உள வேற்றுமை வழியே
உரை
215மரம் அல் எகின் மொழி இயல்பும் அகரம்
மருவ வலிமெலி மிகலும் ஆகும்
உரை
0மலர்தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியின் ஒருதான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவுஇகந்து உயர்ந்த
அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின்
மன இருள் இரிய மாண்பொருள் முழுவதும்
முனிவுஅற அருளிய மூஅறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இருந் தமிழ்க் கடலுள்
அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்
தொகைவகை விரியின் தருகெனத் துன்னார்
இகல் அற நூறி இருநிலம் முழுவதும்
தனது எனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோல் சீய கங்கன்
அருங்கலை வினோதன் அமரா பரணன்
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன்மதில் சனகைச் சன்மதி முனி அருள்
பன்னருஞ் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இருந்தவத் தோனே
உரை
219மவ்வீறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்
உரை
434மற்றையது என்பது சுட்டியதற்கு இனம்
உரை
412மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப்புனலே
உரை
53மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே
உரை
432மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபேறு ஆகும்
உரை