383முக்கா லத்தினும் ஒத்து இயல் பொருளைச்
செப்புவர் நிகழும் காலத் தானே
உரை
43முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்
உரை
1முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்
உரை
258முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை
அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே
உரை
5முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும்
உரை
195முதல் இரு நான்காம் எண் முனர்ப் பத்தின்
இடைஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
என இரு விதியும் ஏற்கும் என்ப
உரை
316முதல் இவை சினை இவை என வேறு உள இல
உரைப்போர் குறிப்பின அற்றே பிண்டமும்
உரை
49முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்
இடுகுறி யானும் நூற்கு எய்தும் பெயரே
உரை
315முதலை ஐ உறின் சினையைக் கண் உறும்
அது முதற்கு ஆயின் சினைக்கு ஐ ஆகும்
உரை
282முதற்பெயர் நான்கும் சினைப்பெயர் நான்கும்
சினைமுதற்பெயர் ஒரு நான்கும் முறை இரண்டும்
தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும்
எல்லாம் தாம் தான் இன்னன பொதுப்பெயர்
உரை
446முரள் நந்து ஆதி நாஅறிவொடு ஈர் அறிவு உயிர்
உரை
459முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை
உரை
374முற்று ஈர் எச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை
உரை
426முற்றும்மை ஒரோ வழி எச்சமும் ஆகும்
உரை
370முன்மொழி பின்மொழி பல்மொழி புறமொழி
எனும் நான்கு இடத்தும் சிறக்கும் தொகைப்பொருள்
உரை
408முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே
உரை
280முன்னர் அவ்வொடு வரு வை அவ்வும்
சுட்டு இறு வவ்வும் கள் இறு மொழியும்
ஒன்று அல் எண்ணும் உள்ள இல்ல
பல்ல சில்ல உள இல பல சில
இன்னவும் பலவின் பெயர் ஆகுமே
உரை
334முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை
உரை
336முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே
உரை
7முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும்
உரை
9

முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின்
வேறுநூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
கூறுபழம் சூத்திரத்தின் கோள்

உரை