335ஐ ஆய் இகர ஈற்ற மூன்றும்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும்
முப்பால் ஒருமை முன்னிலை மொழியே
உரை
318ஐ ஆன் கு செய்யுட்கு அவ்வும் ஆகும்
ஆகா அஃறிணைக்கு ஆன் அல்லாதன
உரை
306ஐ இறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும்
உருபாம் அல்லவற்று ஆயும் ஆகும்
உரை
185ஐ ஈற்று உடைக் குற்றுகரமும் உளவே
உரை
71ஐ ஒள இ உச் செறிய முதலெழுத்து
இவ்விரண்டு ஓரினமாய் வரல் முறையே
உரை
124ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகான் உறழும் என்மரும் உளரே
உரை
192ஐந்தன் ஒற்று அடைவதும் இனமும் கேடும்
உரை
299ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும்
நீங்கல் ஒப்பு எல்லை ஏதுப் பொருளே
உரை
369ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி
உரை
376ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருள்மேல் அன்மையும் விளம்புப
உரை
29ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே
உரை