79கஙவும் சஞவும் டணவும் முதலிடை
நுனி நா அண்ணம் உற முறை வருமே
உரை
110க ச த ப ஒழித்த ஈர் ஏழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு
ஆகும் இவ்விரு பால் மயக்கும் மொழி இடை
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்றே
உரை
457கடி என் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்
உரை
302கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலம் இடம் மேல்கீழ் புடைமுதல்
பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி
உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே
உரை
338கயவொடு ரவ்வொற்று ஈற்ற வியங்கோள்
இயலும் இடம்பால் எங்கும் என்ப
உரை
22கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
சூத்திரத்துள் பொருள் தோற்றுவ காண்டிகை
உரை
39களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித்
தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே
உரை