தொடக்கம் | ||
சிறப்புப்பாயிரம்
|
||
0. | மலர்தலை உலகின் மல்கு இருள் அகல இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியின் ஒருதான் ஆகி முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவுஇகந்து உயர்ந்த அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் மன இருள் இரிய மாண்பொருள் முழுவதும் முனிவுஅற அருளிய மூஅறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இருந் தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியின் தருகெனத் துன்னார் இகல் அற நூறி இருநிலம் முழுவதும் தனது எனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோல் சீய கங்கன் அருங்கலை வினோதன் அமரா பரணன் மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின் வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன் பொன்மதில் சனகைச் சன்மதி முனி அருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி என்னும் நாமத்து இருந்தவத் தோனே |
உரை |