தொடக்கம் | ||
ஆசிரியனது வரலாறு
|
||
26. | குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும் அமைபவன் நூல் உரை ஆசிரி யன்னே |
உரை |
27. | தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும் பருவ முயற்சி அளவில் பயத்தலும் மருவிய நல் நில மாண்பு ஆகுமே |
உரை |
28. | அளக்கல் ஆகா அளவும் பொருளும் துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே |
உரை |
29. | ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே |
உரை |
30. | மங்கலம் ஆகி இன்றி அமையாது யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகம் மலர்வு உடையது பூவே |
உரை |
31. | மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும் அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும் கழல்குடம் மடல்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும் உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே |
உரை |
32. | பெய்தமுறை அன்றிப் பிறழ உடன் தரும் செய்தி கழல்பெய் குடத்தின் சீரே |
உரை |
33. | தானே தரக்கொளின் அன்றித் தன்பால் மேவிக் கொளக்கொடா இடத்தது மடல்பனை |
உரை |
34. | அரிதின் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு எளிது ஈவு இல்லது பருத்திக் குண்டிகை |
உரை |
35. | பல்வகை உதவி வழிபடு பண்பின் அல்லோர்க்கு அளிக்கும் மது முடத்தெங்கே |
உரை |