தொடக்கம் | ||
பாடஞ் சொல்லலினது வரலாறு
|
||
36. | ஈதல் இயல்பே இயம்பும் காலை காலமும் இடனும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளம்கொளக் கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப |
உரை |
37. | தன்மகன் ஆசான் மகனே மன்மகன் பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே |
உரை |