தொடக்கம் | ||
சிறப்புப்பாயிர இலக்கணம்
|
||
47. | ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே |
உரை |
48. | காலம் களனே காரணம் என்றுஇம் மூவகை ஏற்றி மொழிநரும் உளரே |
உரை |
49. | முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும் இடுகுறி யானும் நூற்கு எய்தும் பெயரே |
உரை |
50. | தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு எனத்தகும் நூல்யாப்பு ஈர் இரண்டு என்ப |
உரை |
51. | தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன் தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்று இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே |
உரை |
52. | தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான் தன் புகழ்தல் தகுதி அன்றே |
உரை |
53. | மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே |
உரை |
54. | ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே |
உரை |
55. | மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடுஅமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல்-நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது |
உரை |